உத்தரப் பிரதேசத்தில் தொழிலாளர்களின் குறைந்தபட்ச ஊதியம் ₹20,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவல் முற்றிலும் பொய்யானது என்று அம்மாநில அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது.
இது போன்ற தவறான செய்திகளை நம்ப வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ள யோகி ஆதித்யநாத் அரசு, தற்போதுள்ள விலைவாசி மற்றும் பொருளாதார சூழலைக் கருத்தில் கொண்டு தொழிலாளர்களுக்கு இடைக்கால ஊதிய உயர்வு மட்டுமே வழங்கப்பட்டுள்ளதாக விளக்கம் அளித்துள்ளது. தற்போதுள்ள விதிகளின்படி, திறன் இல்லாத தொழிலாளர்களுக்கு (Unskilled) ₹11,313.65-ம், திறன் கொண்ட தொழிலாளர்களுக்கு (Skilled) ₹13,940.37-ம் ஊதியமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும், அடுத்த மாதம் ஒரு புதிய ‘ஊதிய வாரியம்’ (Wage Board) அமைக்கப்பட உள்ளதாகவும், அதன் பரிந்துரையின் அடிப்படையிலேயே எதிர்காலத்தில் புதிய ஊதிய உயர்வு குறித்து முடிவு செய்யப்படும் என்றும் அரசு அறிவித்துள்ளது.
