இந்தியாவின் ஐடி தலைநகரான பெங்களூருவில் காலடி எடுத்து வைத்தாலே ஆயிரம் ரூபாய் நோட்டுகள் கரைந்துவிடும் என்பது பொதுவான கருத்து. ஆனால், “நினைத்தால் எதையும் சாத்தியமாக்கலாம்” என்பதை நிரூபித்துள்ளார் பிரியங்கா மண்டல் என்ற இளம்பெண்.

வெறும் 500 ரூபாயை வைத்துக்கொண்டு ஒரு நாள் முழுவதும் பெங்களூரு போன்ற காஸ்ட்லியான நகரைச் சுற்றிப் பார்க்க முடியுமா என்ற சவாலை அவர் இன்ஸ்டாகிராமில் வீடியோவாகப் பகிர்ந்துள்ளார். அதிக கட்டணம் வசூலிக்கும் கேப்களைத் தவிர்த்துவிட்டு மெட்ரோ ரயிலைத் தேர்ந்தெடுத்த அவர், காலை உணவை இட்லியுடன் தொடங்கினார்.

மதிய உணவின் போது உணவகங்களின் விலையைப் பார்த்து சற்று அதிர்ச்சியடைந்தாலும், விடாமுயற்சியுடன் தேடி வெறும் 120 ரூபாயில் திருப்தியான மதிய உணவை முடித்தார். மாலை நேரத்தில் வடா பாவ் மற்றும் தேநீர் எனச் செலவுகளைக் கச்சிதமாகத் திட்டமிட்ட பிரியங்காவுக்கு, நாள் முடிவில் ஒரு பெரிய ஆச்சரியம் காத்திருந்தது.

 

 

View this post on Instagram

 

A post shared by Priyanka Mondal (@priyankablrdairy)

பயணம், உணவு, ஊர் சுற்றல் என அனைத்தும் முடிந்த பிறகும் அவரது கையில் 200 ரூபாய் மீதம் இருந்தது. கடந்த ஆண்டு “பெங்களூருவில் 500 ரூபாய் என்பது 50 ரூபாய்க்குச் சமம்” என ஒரு வீடியோ வைரலான நிலையில், பிரியங்காவின் இந்த பட்ஜெட் மேனேஜ்மென்ட் வீடியோ தற்போது இணையத்தில் புயலைக் கிளப்பியுள்ளது.

“ஸ்மார்ட்டாகத் திட்டமிட்டால் எகிறும் விலையுயர்வையும் சமாளிக்கலாம்” என அவர் ஆடிக்காட்டிய மகிழ்ச்சி நடனம், நடுத்தர வர்க்கத்தினருக்குப் புதிய நம்பிக்கையை அளித்துள்ளது. நிஜமாகவே பெங்களூருவில் பட்ஜெட் போடத் தெரியாதவர்கள் இவரைப் பார்த்து கற்றுக் கொள்ளலாம் என நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.