தமிழக அரசியல் களத்தில் நவீன தொழில்நுட்பங்களைப் புகுத்துவதில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) அதிரடி காட்டி வருகிறது.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் தொகுதி வேட்பாளர் வினோத், தனது தேர்தல் பிரசாரத்திற்காகப் புதிய முயற்சியாக ‘ஹோலோகிராம்’ (Hologram) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியுள்ளது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. தவெக தலைவர் விஜய் நேரில் வந்து வாக்கு சேகரிப்பது போன்ற தத்ரூபமான ஹோலோகிராம் காட்சிகளை வேட்பாளர் வினோத் கும்பகோணம் வீதிகளில் ஒளிபரப்பினார்.

“>

 

இதைக் கண்ட பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் வியப்படைந்ததோடு, விஜய்யின் ஹோலோகிராம் உருவத்துடன் உற்சாகமாகச் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக மாறும் என விஜய் வாக்குறுதி அளித்துள்ள நிலையில், அவரது கட்சியினரே பிரசாரத்தில் இத்தகைய அதிநவீன முறையைக் கையாண்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.