தமிழக வெற்றிக் கழகத்தில் (TVK) முக்கியப் பொறுப்பில் இருந்த அஜிதா, அக்கட்சியிலிருந்து விலகி திமுகவில் இணைந்துள்ளார். தூத்துக்குடியில் திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி கருணாநிதி முன்னிலையில் அவர் தன்னை முறைப்படி திமுகவில் இணைத்துக் கொண்டார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அஜிதா, “தமிழக வெற்றிக் கழகத்தில் தனக்கு உரிய அங்கீகாரமும், மரியாதையும் வழங்கப்படவில்லை” என்று பகீர் குற்றச்சாட்டை முன்வைத்தார்.

தேர்தல் நெருங்கும் நேரத்தில் தவெக-வின் முக்கிய நிர்வாகி ஒருவர் விலகி ஆளுங்கட்சியான திமுகவில் இணைந்திருப்பது, தமிழக வெற்றி கழகத்தின் தொண்டர்கள் மற்றும் விஜய் ரசிகர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.