தூத்துக்குடியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை மிகக் கடுமையாகச் சாடினார். பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ள பழனிசாமியால், தமிழகத்தின் முக்கிய கோரிக்கைகளான நீட் விலக்கு, மும்மொழித் திட்ட எதிர்ப்பு மற்றும் தேசியக் கல்விக் கொள்கை ஆகியவற்றை டெல்லி மேலிடத்திடம் வலியுறுத்த முடியுமா என்று கேள்வி எழுப்பினார்.

​”இலங்கைத் தமிழர்களுக்குக் குடியுரிமை, பொது சிவில் சட்ட எதிர்ப்பு, மற்றும் கிறிஸ்தவ அமைப்புகளைப் பாதிக்கும் எஃப்சிஆர்ஏ (FCRA) சட்டத்தைத் திரும்பப் பெறச் செய்ய உங்களால் முடியுமா?” என்று வினவிய ஸ்டாலின், பாஜகவிடம் எடப்பாடி பழனிசாமி ஒரு ‘தலையாட்டி பொம்மை’யாகவும், ‘ரப்பர் ஸ்டாம்பாகவுமே’ செயல்படுவதாகக் குற்றம் சாட்டினார். தமிழக உரிமைகளுக்காக டெல்லி ஓனர்களிடம் பேசத் துணிவில்லாத பழனிசாமியால் எதையும் சாதிக்க முடியாது என்றும் ஆவேசமாக முழங்கினார்.