ஐபிஎல் 2026 தொடரின் 19-வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிராக குஜராத் டைட்டன்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியில் முக்கிய பங்கு வகித்த கேப்டன் ஷுப்மன் கில், 40 பந்துகளில் 56 ரன்கள் எடுத்து அசத்தினார்.
இது இந்த சீசனில் அவர் அடிக்கும் இரண்டாவது தொடர்ச்சியான அரைசதமாகும். இந்த சிறப்பான ஆட்டத்தின் மூலம் ஐபிஎல் வரலாற்றில் 4000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டிய இளம் வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை ஷுப்மன் கில் படைத்துள்ளார்.
இதற்கு முன்பு விராட் கோலி வசம் இருந்த இந்தச் சாதனையை, ஷுப்மன் கில் தனது 26 வயது மற்றும் 216 நாட்களில் முறியடித்துள்ளார். மேலும், குறைந்த இன்னிங்ஸில் (118 இன்னிங்ஸ்) 4000 ரன்களை எட்டிய இரண்டாவது இந்திய வீரர் மற்றும் குறைந்த பந்துகளில் இந்த ரன்களைக் கடந்த இரண்டாவது வீரர் போன்ற பல்வேறு பெருமைகளையும் அவர் பெற்றுள்ளார்.
ஒரு கேப்டனாக அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றதுடன், பேட்டிங்கிலும் ஜாம்பவான் விராட் கோலியின் சாதனையைச் தகர்த்திருப்பது ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
