இந்திய அணியின் இளம் நட்சத்திரமாக எதிர்காலமாக உருவாகி வரும் வைபவ் சூர்யவன்சி தான் தற்போது நடைபெறும் ஐபிஎல் ஹீரோவாக இருக்கிறார். 13 வயதில் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் அணியில் அறிமுகமான இவருக்கு தற்போது 15 வயது ஆகிறது. தற்போது ராஜஸ்தான் அணிக்காக விளையாடி வரும் வைபவ் பேட்டிங்கில் அதிரடி காட்டி பந்து வீச்சாளர்களை தெறிக்க விடுகிறார். இவரது அதிரடியால் ராஜஸ்தான் இதுவரை ஒரு போட்டியில் கூட தோற்காமல் தொடர்ந்து புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறது.
இதன் காரணமாக அவரை இந்திய அணியில் விரைவில் எடுக்க வேண்டும் என முன்னணி நட்சத்திரங்கள் உட்பட ரசிகர்கள் பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இருப்பினும் 15 வயது சிறுவன் என்பதை வைபவ் அடிக்கடி நிரூபித்துக் கொண்டே இருக்கிறார். அதாவது பேருந்தில் செல்லும்போது மேலே இருந்த லைட்டை ஆப் செய்து அனைத்து அவர் விளையாடிக் கொண்டிருந்தார். மேலும் இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது
Vaibhav Suryavanshi is now a certified 15 years old child😭😭
pic.twitter.com/TaBsYojMRr— Ishan Ghosh¹⁷🇮🇳 (@PantVerse) April 12, 2026
