தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் அனல் பறக்கத் தொடங்கியுள்ள நிலையில், கன்னியாகுமரி மாவட்டம் மகாதானபுரத்தில் தவெக தலைவர் விஜய் இன்று மாபெரும் தேர்தல் பரப்புரையை மேற்கொண்டார். அவரை ஒருமுறை நேரில் பார்த்துவிட வேண்டும் என்ற ஆசையில், இன்று காலை 9 மணி முதலே ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் கூட்டம் கூட்டமாகத் திரளத் தொடங்கினர்.

சுட்டெரிக்கும் கத்திரி வெயிலையும் பொருட்படுத்தாமல் மணிக்கணக்காகக் காத்திருந்ததால், கூட்ட நெரிசல் மற்றும் வெப்பம் காரணமாகத் தொண்டர்கள் இருவர் திடீரென மயங்கி விழுந்தனர்.

அங்கிருந்த மருத்துவக் குழுவினர் உடனடியாக அவர்களுக்கு முதலுதவி அளித்து, மேல் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்தச் சம்பவத்தால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. பின்னர் திட்டமிட்டபடி மகாதானபுரம் சந்திப்பு மற்றும் ஜீரோ பாயிண்ட் பகுதிகளில் விஜய் தனது வாகனத்தில் இருந்தபடியே தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.