மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் மேகங்களுக்கு மத்தியில், ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே இரண்டு வார கால தற்காலிகப் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இக்கட்டான சூழலிலும், ஈரானில் போலீஸ் அதிகாரி ஒருவர் செய்துகொண்ட ‘தற்காலிகத் திருமணம்’ குறித்த செய்தி பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

ஈரானின் அல்போர்ஸ் மாகாணத்தைச் சேர்ந்த சாவோஜ்போலாக் என்ற போலீஸ் அதிகாரி, ஈரான் – அமெரிக்கா இடையிலான தற்காலிகப் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட அன்றிரவே, ஒரு பெண்ணுடன் ஒரு மாத கால ஒப்பந்த அடிப்படையில் ‘தற்காலிகத் திருமணம்’ செய்துகொண்டதாக ‘ஈரான் இன்டர்நேஷனல்’ செய்தி தளம் தெரிவித்துள்ளது. பிராந்தியமே போரினால் சிதைந்து வரும் நிலையில், இந்தச் செய்தி மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈரானில் நிலவும் ஷியா இஸ்லாமிய சட்டங்களின்படி, ‘முத்ஆ’ (Mut’ah) அல்லது ‘சிக்ஹே’ (Sigheh) எனப்படும் தற்காலிகத் திருமண முறை அனுமதிக்கப்படுகிறது. இது சில மணிநேரங்கள் முதல் பல ஆண்டுகள் வரை நீடிக்கலாம். இதற்கான காலக்கெடு மற்றும் நிபந்தனைகள் முன்கூட்டியே தம்பதியினரால் ஒப்புக்கொள்ளப்படும். ஒப்பந்த காலம் முடிந்தவுடன் இந்தத் திருமணம் தானாகவே முடிவுக்கு வரும். ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே தற்போது நிலவும் இரண்டு வார காலப் போர் நிறுத்தம் மிகவும் பலவீனமான நிலையில் உள்ளது.

லெபனான் மீது இஸ்ரேல் நடத்தி வரும் தொடர் தாக்குதல்கள். ஈரானின் பதிலடி நடவடிக்கைகள், ஹார்முஸ் ஜலசந்தியில் (Strait of Hormuz) விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள், பேச்சுவார்த்தைக்கு ஈரான் விதித்துள்ள புதிய நிபந்தனைகள். போன்ற காரணங்களால் இந்தத் தற்காலிக அமைதி எப்போது வேண்டுமானாலும் முடிவுக்கு வரலாம் என அஞ்சப்படுகிறது. பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தால் ஈரான் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார். இது குறித்து தனது ‘ட்ரூத் சோஷியல்’ தளத்தில் பதிவிட்டுள்ள அவர்:

மேலும் ஈரானிடம் இப்போது ஆடுவதற்கு எந்தச் சீட்டும் இல்லை. அவர்கள் உயிருடன் இருப்பதற்குக் காரணமே பேச்சுவார்த்தை நடத்தத்தான். இஸ்லாமாபாத் பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால், ஈரானுக்கு எதிராக இதுவரை பார்த்திராத நவீன ஆயுதங்களுடன் மிகப்பெரிய ராணுவ நடவடிக்கை எடுக்கப்படும். கப்பல்களில் வெடிமருந்துகள் ஏற்றப்பட்டு வருகின்றன,” என பகிரங்கமாக எச்சரித்துள்ளார்.