விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு மற்றும் விஜய்யின் அரசியல் நகர்வுகள் தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வரும் நிலையில், தற்போது திமுகவின் கோட்டையாகக் கருதப்படும் சென்னை தி.நகர் தொகுதியில் அக்கட்சிக்கு மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

தி.நகர் தொகுதியின் சிட்டிங் எம்.எல்.ஏ-வான ஜே. கருணாநிதிக்கு இந்த முறை மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாததால், அவர் ஏற்கனவே தனது கட்சிப் பதவியை ராஜினாமா செய்திருந்தார். இந்நிலையில், திமுக தலைமைக்கு மேலும் அதிர்ச்சியளிக்கும் வகையில், கருணாநிதியின் மகள் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் முன்னிலையில் முறைப்படி அக்கட்சியில் இணைந்தார்.

கட்சி இணைந்த கையோடு, தி.நகர் தொகுதியில் போட்டியிடும் தவெக வேட்பாளர் புஸ்ஸி ஆனந்தின் வெற்றிக்காகத் தீவிரமாகப் பிரச்சாரத்தில் களமிறங்கியுள்ள அவர், திமுகவினருக்குப் பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளார்.