கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் திமுக வேட்பாளரை ஆதரித்துப் பிரச்சாரம் செய்த விசிக தலைவர் திருமாவளவன், தனது கட்சி எப்போதும் கொள்கையில் உறுதியாக இருக்கும் என்று பேசினார்.

இந்தியாவிலேயே பாரதிய ஜனதா கட்சியால் ஒருபோதும் விலைக்கு வாங்க முடியாத ஒரே கட்சி விடுதலைச் சிறுத்தைகள் கட்சிதான் என்று அவர் பெருமிதத்துடன் குறிப்பிட்டார். தாங்கள் வாக்கு சதவீதத்தை வைத்துப் பேரம் பேசி கூட்டணி அமைக்கும் கட்சி அல்ல என்பதையும் அவர் தெளிவுபடுத்தினார்.‌ நாட்டின் அரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாக்க வேண்டியது தற்போதைய முக்கியத் தேவை என்று கூறிய அவர், அதற்காகவே தமிழக முதலமைச்சர் ஸ்டாலினின் கையைத் தாம் ‘உடும்புப் பிடி’ போலப் பிடித்துக் கொண்டிருப்பதாகத் தெரிவித்தார்.

திமுக தலைமையிலான இந்தக் கூட்டணி கொள்கை ரீதியானது என்றும், சமூக நீதியைக் காக்க அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும் அவர் தனது உரையில் வலியுறுத்தினார்.