தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தனது தேர்தல் பிரச்சாரத்தின் போது செய்த அதிரடி காரியம் ஒன்று தற்போது இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது.

சுமார் மூன்றரை மணி நேரத்திற்கும் மேலாகப் பிரச்சார வேனில் அமர்ந்தபடி வாக்கு சேகரித்த விஜய்க்கு, நீண்ட நேரமாக உட்கார்ந்திருந்ததால் கால் வலி ஏற்பட்டுள்ளது.

இதனால் சற்று உடல் தளர்வுக்காக திடீரென வேனில் இருந்து கீழே இறங்கிய விஜய், அங்கிருந்த ஒரு சைக்கிளை வாங்கி ஓட்டத் தொடங்கினார்.

இதைப் பார்த்ததும் உற்சாகமடைந்த தொண்டர்கள் அவரைச் சூழ்ந்து கொள்ள, விஜய்யைப் பாதுகாப்பதற்காகப் பவுன்சர்கள் அங்கும் இங்கும் ஓடி பெரும் போராட்டமே நடத்திவிட்டனர்.

விஜய்யின் இந்தத் திடீர் சைக்கிள் பயணத்தைப் பார்த்த நெட்டிசன்கள், இது அப்படியே ‘வாத்தி சைக்கிள் ரைடு’ போல மாஸாக இருப்பதாகக் கமெண்ட் செய்து வருகின்றனர்.