பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தொடர்ந்த மாம்பழம் சின்னத்தை முடக்கக்கோரிய வழக்கை உயர்நீதிமன்றம் அதிரடியாகத் தள்ளுபடி செய்துள்ளது. தேர்தல் களத்தில் வேட்பாளர்களுக்கு ஏற்கனவே சின்னங்கள் ஒதுக்கப்பட்டுவிட்டதால், இந்த நேரத்தில் இந்த வழக்கு செல்லத்தக்கது அல்ல என்று தேர்தல் ஆணையம் தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதத்தை ஏற்று நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

​மேலும், இந்த வழக்கின் விசாரணையின் போது, ராமதாஸ் தரப்பு வேட்பாளர்கள் ‘சிலிண்டர்’ சின்னத்தை ஏற்றுக்கொண்டுள்ளனர் என்று அன்புமணி தரப்பில் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. மாம்பழ சின்னம் தொடர்பாகத் தொடரப்பட்ட இந்த சட்டப் போராட்டம் தோல்வியில் முடிந்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.