இணையதளங்களில் வைரல் ஆவதற்காக வினோதமான உணவுகளைத் தயாரிக்கும் வீடியோக்கள் தற்போது அதிகரித்து வருகின்றன. அந்த வகையில், மீதமான சமோசாக்களை வைத்து ஒரு புதிய வகை உணவைத் தயாரிக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. அந்த வீடியோவில், மீதமான சமோசாக்களை வெங்காயம், பூண்டு, தக்காளி மற்றும் எலுமிச்சை சாறுடன் சேர்த்து மிக்சியில் போட்டு அரைக்கிறார்கள்.
பின்னர் அந்த விழுதில் கடலை மாவு, உப்பு மற்றும் சீரகப்பொடி சேர்த்து பிசைந்து, சிறிய உருண்டைகளாக உருட்டி எண்ணெய்களில் பொரித்து ‘கட்லெட்’ போல மாற்றுகிறார்கள். சாதாரண சமோசாவை முற்றிலும் உருமாற்றி புதிய பெயரில் விற்கும் இந்த முறை பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ஹோட்டல்களில் சமோசாக்கள் மீந்துவிட்டால், அவற்றை வீணாக்காமல் இதுபோல புதிய உணவாக மாற்றி, அசல் சமோசாவை விட அதிக விலைக்கு விற்பனை செய்வதாக அந்த வீடியோவில் கூறப்பட்டுள்ளது. சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட இந்த வீடியோவை பார்த்த பயனர்கள் பலவிதமான கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
Samose hum sharminda hai
Tere kaatil zinda hai 😭 pic.twitter.com/bxy9TWKb4A— GSK (@GSVKapoor) April 8, 2026
“>
சிலர் உணவு வீணாவதைத் தடுக்க இது ஒரு நல்ல வழி என்று கூறினாலும், பெரும்பாலானோர் இது ஒரு மோசமான முயற்சி என்றும், பழைய உணவை இப்படிப் புதியது போல மாற்றி விற்பது ஆரோக்கியமற்றது என்றும் கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இத்தகைய வினோதமான சோதனைகள் உணவின் உண்மையான சுவையைக் கெடுப்பதாகப் பலரும் பதிவிட்டு வருகின்றனர்.
