ஐபிஎல் 2026 கிரிக்கெட் தொடரில், நேற்று கொல்கத்தா மற்றும் லக்னோ அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியின் போது எடுக்கப்பட்ட ஒரு கேட்ச் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கொல்கத்தா அணியின் தொடக்க ஆட்டக்காரர் பின் ஆலன் அடித்த பந்தை, எல்லையருகே நின்றிருந்த லக்னோ வீரர் திக்வேஷ் சிங் ரதி கேட்ச் பிடித்தார்.
இது பார்ப்பதற்குச் சிறப்பான கேட்ச் போலத் தெரிந்தாலும், அவர் பந்தைப் பிடிக்கும்போது அவரது இடது கால் எல்லைக் கோட்டை தொட்டதாகச் சந்தேகங்கள் எழுந்தன. டிவி நடுவர் பலமுறை சோதித்த பிறகும் போதிய ஆதாரங்கள் இல்லை எனக் கூறி அவுட் கொடுத்ததால், ரசிகர்கள் மத்தியில் இது விவாதமாக மாறியுள்ளது.
கிரிக்கெட் விதிமுறைப்படி, பந்தைப் பிடிக்கும்போது வீரரின் உடல் பாகம் எல்லைக் கோட்டைத் தொட்டால் அது சிக்ஸராக அறிவிக்கப்பட வேண்டும். ஆனால், இந்த ஆட்டத்தில் பின் ஆலன் வெறும் 9 ரன்களில் அவுட் என்று அறிவிக்கப்பட்டது கொல்கத்தா அணிக்குத் தொடக்கத்திலேயே பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது.
SKIED… AND TAKEN ON THE FENCE! 😱
Top edge from Allen, & Rathi pulls off a sharp catch at deep third 👏#TATAIPL 2026 | #KKRvLSG | LIVE NOW 👉 https://t.co/2ISFQDaiMT pic.twitter.com/kHnYWXKSh6
— Star Sports (@StarSportsIndia) April 9, 2026
“>
இந்தச் சம்பவம் குறித்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், நடுவரின் தீர்ப்பு தவறானது என ஒரு தரப்பினரும், அது ஒரு மிகச்சிறந்த கேட்ச் என மறுதரப்பினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனால் மைதானத்திலும் இணையத்திலும் பரபரப்பு நிலவியது.
