சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் ஆண், பெண் இருபாலரும் செய்யாத ஒரு இமாலய சாதனையை பிரேசில் நாட்டின் 21 வயது இளம் வேகப்பந்து வீச்சாளர் லாரா கார்டோசோ (Laura Cardoso) நிகழ்த்தியுள்ளார்.

போட்ஸ்வானாவில் நடைபெற்ற ‘கலகாரி மகளிர் டி20’ தொடரில் லெசோதோ அணிக்கு எதிரான போட்டியில், வெறும் 3 ஓவர்கள் மட்டுமே வீசிய லாரா, 4 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 9 விக்கெட்டுகளைக் குவித்து உலக சாதனை படைத்துள்ளார்.

“>

 

இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பிரேசில் அணி 202 ரன்கள் குவித்த நிலையில், லாராவின் அபாயகரமான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் லெசோதோ அணி வெறும் 13 ரன்களுக்குச் சுருண்டது. இதன் மூலம் 189 ரன்கள் வித்தியாசத்தில் பிரேசில் மெகா வெற்றி பெற்றதோடு, டி20 கிரிக்கெட் வரலாற்றில் ஒரு இன்னிங்ஸில் அதிக விக்கெட் எடுத்த வீரர் என்ற பெருமையையும் லாரா கார்டோசோ பெற்றுள்ளார்.