ஐபிஎல் போட்டியில் லக்னோ அணிக்கு எதிரான ஆட்டத்தில், கொல்கத்தா கேப்டன் அஜிங்கியா ரகானே பேட்டிங் செய்தபோது ஒரு வினோதமான சம்பவம் நடந்தது. ஆவேஷ் கான் வீசிய பந்தை ரகானே சிக்ஸருக்கு விளாச முயன்றபோது, எதிர்பாராதவிதமாக அவர் கையில் இருந்த பேட் நழுவி தூரப் போய் விழுந்தது. ஆனால், பேட் கையை விட்டுப் போனாலும் பந்து மட்டும் எல்லைக் கோட்டைத் தாண்டி சிக்ஸராக மாறியது. இதைப் பார்த்த ரசிகர்கள் மற்றும் வீரர்கள் ஆச்சரியத்தில் உறைந்து போயினர்.

​இந்த ஆட்டத்தில் அதிரடியாக விளையாடிய ரகானே 41 ரன்களும், ரகுவன்ஷி 45 ரன்களும் எடுக்க, கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 181 ரன்கள் குவித்தது. லக்னோ அணிக்கு 182 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பேட் நழுவி விழுந்தும் சிக்ஸர் பறந்த அந்த வினோத வீடியோ இப்போது இணையத்தில் செம வைரலாகி வருகிறது. ‘பேட் இல்லாமலேயே சிக்ஸர் அடித்த ரகானே’ என ரசிகர்கள் கிண்டலாகப் பாராட்டி வருகின்றனர்.