ஐபிஎல் 2026 தொடரில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) அணி கண்டெடுத்த புதிய வைரமாக ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த இளம் வீரர் முகுல் சௌத்ரி உருவெடுத்துள்ளார்.
அபுதாபியில் நடந்த மினி ஏலத்தில், வெறும் 30 லட்சம் ரூபாய் அடிப்படை விலையுடன் களமிறங்கிய இவரை வாங்குவதற்கு ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கிடையே கடும் போட்டி நிலவியது. இறுதியில், 2.6 கோடி ரூபாய் என்ற மிகப்பெரிய தொகைக்கு லக்னோ அணி இவரைக் தட்டித்தூக்கியது.
தனது திறமையை நிரூபிக்க அதிக காலம் எடுத்துக்கொள்ளாத முகுல், கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் கே.கே.ஆர் அணிக்கு எதிராக 27 பந்துகளில் 54 ரன்கள் விளாசி, கடைசி ஓவரில் லக்னோ அணிக்கு ஒரு த்ரில் வெற்றியைத் தேடித்தந்து ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
ONE OF THE CRAZIEST SHOTS YOU WILL EVER SEE…. UNBELIEVABLE WRIST WORK. 🥶
– Even Umesh Yadav in the comm box couldn’t believe. pic.twitter.com/CFSMu4S9ER
— Mufaddal Vohra (@mufaddal_vohra) April 9, 2026
“>
21 வயதான முகுல் சௌத்ரி, விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனாக பன்முகத் திறமை கொண்டவர். ஜெய்ப்பூரில் உள்ள ஆரவல்லி கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி பெற்ற இவர், சையத் முஷ்டாக் அலி டி20 தொடரில் டெல்லி மற்றும் மும்பை அணிகளுக்கு எதிராக ஆடிய அதிரடி ஆட்டமே இவரை ஐபிஎல் ஏலத்தின் பேசுபொருளாக மாற்றியது.
குறிப்பாக, ராஜஸ்தானின் 23 வயதுக்குட்பட்டோர் அணிக்காக விளையாடி 100-க்கும் அதிகமான சராசரியில் 617 ரன்களைக் குவித்து மலைக்க வைத்துள்ளார். ஆரம்பத்தில் ஒரு தொடக்க ஆட்டக்காரராகத் தனது பயணத்தைத் தொடங்கினாலும், தற்போது ஒரு நம்பிக்கைக்குரிய ‘ஃபினிஷராக’ வளர்ந்துள்ள முகுல் சௌத்ரி, லக்னோ அணியின் பேட்டிங் வரிசையில் ஒரு வலுவான தூணாகப் பார்க்கப்படுகிறார்.
