தர்மபுரி மாவட்டத்தில் சட்டவிரோதமாக கருவில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா எனக் கண்டறிந்து கருக்கலைப்பு செய்யப்படுவதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் சுகாதாரத் துறை அதிகாரிகள் மற்றும் மருத்துவக் குழுவினர் அங்குள்ள செந்தில் என்பவரது வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது, பாலினத்தைக் கண்டறியும் கருவிகள் மற்றும் கருக்கலைப்பு மாத்திரைகள் அங்கு இருப்பதை கண்டுபிடித்து அவற்றைப் பறிமுதல் செய்தனர். விசாரணையில், செந்திலின் மகள் பரிமளா என்பவர் நர்சிங் படித்துவிட்டு, சாந்தி என்ற பெண்ணின் உதவியுடன் இந்த சட்டவிரோத செயலில் ஈடுபட்டது தெரியவந்தது.

இவர்கள் இருவரும் ஏற்கனவே கடந்த ஆண்டு இதேபோன்ற ஒரு வழக்கில் சிக்கி ஜாமீனில் வெளிவந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது பென்னாகரம் போலீசார் பரிமளா மற்றும் சாந்தி ஆகிய இருவரையும் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.