நேபாளத்தில் பொதுச் சாலையில் குட்கா துப்பிய இந்தியர்களை, அங்கிருந்த உள்ளூர் நபர் ஒருவர் தட்டிக்கேட்டு சுத்தம் செய்ய வைத்த வீடியோ இணையத்தில் வைரலாகி விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. “இது இந்தியா இல்லை சகோதரா, நேபாளம்; இங்கே வந்து அழுக்கு செய்யாதீர்கள்” என்று அந்த நபர் கண்டிப்பதோடு, சாலையில் படிந்திருந்த குட்கா கறையைத் தண்ணீர் ஊற்றி அவர்களைச் சுத்தம் செய்ய வைக்கிறார்.

இந்தியா போன்ற பெரிய நாட்டிலிருந்து வந்துவிட்டு இப்படிப் பொறுப்பில்லாமல் நடந்துகொள்வதைச் சுட்டிக்காட்டி அவர் பேசியது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இந்தச் சம்பவத்திற்கு சமூக வலைதளங்களில் ஆதரவும் எதிர்ப்பும் கலந்த எதிர்வினைகள் எழுந்துள்ளன. பொது இடங்களில் அசுத்தம் செய்பவர்களைத் தட்டிக்கேட்ட நேபாள நபருக்குப் பலரும் பாராட்டு தெரிவித்து வரும் நிலையில், குட்கா மற்றும் புகையிலை பொருட்களால் ஏற்படும் சீர்கேடுகள் குறித்தும் விவாதங்கள் தொடங்கியுள்ளன.

“>

 

இந்தியாவில் பொது ஒழுக்கத்தை மேம்படுத்த இது போன்ற புகையிலை பொருட்களுக்கு அரசு கடுமையான தடை விதிக்க வேண்டும் என்றும், அப்போதுதான் பொதுமக்களின் நடத்தையில் மாற்றம் ஏற்படும் என்றும் பல இணையவாசிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.