மத்திய பிரதேச மாநிலம் ரீவா மாவட்டத்தில் உள்ள ஒரு அரசுப் பள்ளியில், கல்வித் துறையையே தலைகுனிய வைக்கும் விதமான ஒரு வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், அரசுப் பள்ளி ஆசிரியை ஒருவர் தனது காதில் இயர்போனை மாட்டிக்கொண்டு யாரிடமோ மிகத் தீவிரமாகப் பேசிக்கொண்டிருக்கிறார். அதே நேரத்தில், அங்கு படிக்கும் ஒரு சிறுவன் கையில் ஒரு அட்டையை வைத்துக்கொண்டு அந்த ஆசிரியைக்கு விசிறி விட்டுக்கொண்டிருக்கிறான்.
कान में ईयरफोन, मैम बातचीत में व्यस्त. बच्चा पंखा हांके पड़ा है.
ये शिक्षा व्यवस्था के नाम पर मजाक नहीं तो क्या है. वीडियो मध्य प्रदेश के रीवा जिले के एक सरकारी स्कूल का है. pic.twitter.com/8UEulkb0em
— Priya singh (@priyarajputlive) April 8, 2026
பாடம் கற்பிக்க வேண்டிய நேரத்தில் மாணவனை ஒரு வேலைக்காரனைப் போலப் பயன்படுத்திவிட்டு, ஆசிரியை எந்தக் கவலையுமின்றி அரட்டை அடிப்பது பார்ப்பவர்களைக் கொதிக்க வைத்துள்ளது. கல்வி முறையையே கேலிக்குள்ளாக்கும் விதமாக அமைந்துள்ள இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் மிக வேகமாகப் பரவி வருகிறது. சம்பந்தப்பட்ட ஆசிரியை மீது அதிகாரிகள் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
