டெல்லி ராஜீவ் சவுக் பகுதியில் ராபிடோ (Rapido) பைக் ரைடர் ஒருவர் எதிர்பாராத விதமாகப் பயங்கர விபத்தில் சிக்கினார். இந்த விபத்தில் அவருக்குக் கடுமையான எலும்பு முறிவு ஏற்பட்டு, கையைக்கூட அசைக்க முடியாத நிலையில் வலியால் துடித்துள்ளார். இதைப் பார்த்த அங்கிருந்தவர்கள் உடனடியாகப் பிளிங்கிட் (Blinkit) ஆம்புலன்ஸ் சேவைக்குத் தகவல் கொடுத்துள்ளனர்.

​தகவல் கிடைத்த அடுத்த 9 நிமிடங்களில் சம்பவ இடத்திற்கு வந்த பிளிங்கிட் ஆம்புலன்ஸ் குழுவினர், காயமடைந்த ரைடருக்கு முதலுதவி அளித்து, உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தனர். மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், இந்த உயிர்காக்கும் அவசரச் சேவை முற்றிலும் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது. சரியான நேரத்தில் உதவிய பிளிங்கிட் நிறுவனத்தின் இந்தச் சேவையை நெட்டிசன்கள் “நிஜமான ஹீரோக்கள்” என சமூக வலைதளங்களில் பாராட்டி வருகின்றனர்.