தெற்கு குஜராத்தின் பார்லி சார் ரஸ்தா பகுதியில், தேசிய நெடுஞ்சாலையோரம் (NH48) நடந்து சென்ற மொபைல் கடை உரிமையாளர் நிகில் பாய், எதிர்பாராத விதமாக ஒரு பயங்கர விபத்தில் சிக்கினார். அவர் சாலையோரம் இருந்த சாக்கடை மூடியின் மீது கால் வைத்தபோது, அது மிகவும் பலவீனமாக இருந்ததால் பாரம் தாங்காமல் சட்டென உடைந்து நொறுங்கியது. இதில் அவர் கண் இமைக்கும் நேரத்தில் சாக்கடைக்குள் தலைகுப்புற விழுந்தார்.

​அதிர்ஷ்டவசமாக, அங்கிருந்த பொதுமக்கள் மின்னல் வேகத்தில் செயல்பட்டு அவரை பத்திரமாக மீட்டனர். பலவீனமான சிமெண்ட் மூடிகளைப் போட்டு மக்களின் உயிரோடு விளையாடும் அதிகாரிகளின் அலட்சியத்தை இந்த வீடியோ வெளிச்சம் போட்டுக்காட்டியுள்ளது. “நல்லவேளை உயிர் தப்பினார், இல்லையென்றால் இது ஒரு பெரிய விபத்தாக முடிந்திருக்கும்” என இணையத்தில் மக்கள் கொதிப்படைந்து வருகின்றனர்