இந்தோனேசியாவில் உள்ள சில கிராமங்களில் ‘நிக்காஹ் முத்தா’ அல்லது ‘இன்பத் திருமணம்’ என்ற பெயரில் ஒரு விசித்திரமான திருமண வழக்கம் நடைமுறையில் உள்ளது. இதன் மூலம் சுற்றுலாப் பயணிகள் தங்களுக்குப் பிடித்தமான பெண்களை 15 நாட்கள் அல்லது ஒரு மாத காலத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் திருமணம் செய்து கொள்ளலாம்.
இதற்கு விவாகரத்தோ அல்லது வாழ்நாள் முழுமைக்கும் ஜீவனாம்சம் வழங்க வேண்டிய அவசியமோ இல்லை. ஒப்பந்த காலம் முடிந்தவுடன், சுற்றுலாப் பயணிகள் நாட்டை விட்டு வெளியேறும்போது இந்தத் திருமணமும் தானாகவே முடிவுக்கு வந்துவிடும்.
வறுமையில் வாடும் பல ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள், தங்கள் வாழ்வாதாரத்திற்காக இத்தகைய திருமணங்களுக்குச் சம்மதிக்கின்றனர். ஒரு திருமணத்திற்காக இந்தப் பெண்களுக்கு சுமார் 300 முதல் 500 டாலர்கள் வரை பணம் வழங்கப்படுகிறது.
புனிதமான சடங்காகக் கருதப்படும் திருமணத்தை ஒரு நிதிப் பரிவர்த்தனையாகவும், தற்காலிக ஒப்பந்தமாகவும் மாற்றியுள்ள இந்த வழக்கம் சர்வதேச அளவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதற்காக இத்தகைய கலாச்சாரம் அங்கே தொடர்வது அதிர்ச்சியளிக்கிறது.
