தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் சட்டமன்றத் தொகுதியில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.

அப்போது அங்கு திரண்டிருந்த பொதுமக்கள் மற்றும் தொண்டர்களிடையே உற்சாகமாகப் பேசிய அவர், ஒரு தம்பதியினரின் வேண்டுகோளை ஏற்று அவர்களது ஆண் குழந்தைக்கு ‘உதயசூரியன்’ எனப் பெயர் சூட்டினார்.

தேர்தல் களத்தில் அனல் பறக்கும் பிரச்சாரங்களுக்கு இடையே, உதயநிதி ஸ்டாலின் குழந்தைக்கு பெயர் சூட்டிய இந்த நெகிழ்ச்சியான சம்பவம் அங்கிருந்தவர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

கட்சியின் சின்னமான உதயசூரியன் பெயரையே குழந்தைக்குச் சூட்டியதால் திமுகவினர் மிகுந்த உற்சாகத்துடன் கோஷங்களை எழுப்பினர்.