தமிழக வெற்றிக் கழகத்தினரை ‘தற்குறி’ என்று விமர்சித்த திமுகவினருக்கு, திருச்செங்கோடு தவெக வேட்பாளர் அருண்ராஜ் செம காட்டமான பதிலடி கொடுத்துள்ளார். “எங்களை தற்குறி என்று சொல்கிறீர்களா? தைரியம் இருந்தால் நேருக்கு நேர் விவாதத்திற்கு வாருங்கள்” என அவர் பகிரங்கமாக சவால் விடுத்துள்ளார். “எங்கள் தரப்பில் இருந்து ஒரு ஒன்றிய செயலாளரை விவாதத்திற்கு அனுப்புகிறோம்; திமுக தரப்பில் இருந்து உங்கள் மாவட்ட அல்லது ஒன்றிய செயலாளரை அனுப்புங்கள். யார் தற்குறி என்று மக்கள் முன்னிலையிலேயே பார்த்துவிடலாம்” என அவர் ஆவேசமாகப் பேசியுள்ளார்.
தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக மற்றும் தவெக இடையே நிலவும் இந்த வார்த்தைப் போர் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, தவெகவின் அடிமட்டத் தொண்டர்களுக்குக் கூட அரசியல் தெளிவு இருக்கிறது என்பதைக் காட்டவே இந்த சவாலை விடுத்துள்ளதாக அருண்ராஜ் தரப்பு கூறுகிறது. திருச்செங்கோட்டில் தொடங்கியுள்ள இந்த ‘விவாதச் சவால்’ இப்போது தமிழகம் முழுவதும் உள்ள தவெக தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
