சமூக வலைதளங்களில் தினமும் பல விசித்திரமான வீடியோக்கள் வைரலாவதைப் பார்த்திருப்போம். அந்த வரிசையில், தற்போது டிரைவிங் டெஸ்ட் கொடுக்க வந்த ஒரு பெண்ணின் வீடியோ இணையவாசிகளைப் பெருமளவில் கவர்ந்து வருகிறது.
பொதுவாக ஓட்டுநர் உரிமம் பெற வேண்டுமென்றால், சம்பந்தப்பட்ட வாகனத்தை ஓட்டிச் காண்பிக்க வேண்டும். ஆனால், இந்த வீடியோவில் உள்ள பெண், ஸ்கூட்டியை ஸ்டார்ட் செய்து இன்ஜின் மூலம் ஓட்டுவதற்குப் பதிலாக, அதன் மீது அமர்ந்து கொண்டு தனது கால்களாலேயே தரையைத் தள்ளித் தள்ளி ஸ்கூட்டியை முன்னோக்கி நகர்த்திச் செல்கிறார்.
Woman Arrives To Get Her Driving license, shocked When Asked To Take A Real Driving Test pic.twitter.com/Vytnzsbb8i
— Ghar Ke Kalesh (@gharkekalesh) April 3, 2026
இதைப் பார்த்த அங்கிருந்த அதிகாரிகளும், பொதுமக்களும் சிரிப்பை அடக்க முடியாமல் திகைத்துப் போயுள்ளனர். ‘Ghar Ke Kalesh’ என்ற எக்ஸ் (X) தள பக்கத்தில் பகிரப்பட்டுள்ள இந்த வீடியோவை ஆயிரக்கணக்கானோர் லைக் செய்து பகிர்ந்து வருகின்றனர்.
“இவர் ஓட்டுவது ஸ்கூட்டியா அல்லது மிதிவண்டியா?” என்றும், “இந்த ஸ்டைலில் வண்டி ஓட்டினால் நிச்சயம் லைசென்ஸ் கிடைத்துவிடும்” என்றும் நெட்டிசன்கள் வேடிக்கையாகக் கமெண்ட் செய்து வருகின்றனர். எப்படியோ, இந்தப் பெண்ணின் வித்தியாசமான டிரைவிங் ஸ்கில்ஸ் இப்போது இணையத்தில் ஹாட் டாப்பிக்.
