மத்தியப் பிரதேச மாநிலம் சாகர் மாவட்டத்தில், 22 வயதான ராஜேந்திரா (என்கிற கோலு) மற்றும் அவரது 21 வயது மனைவி காஜல் பட்டேல் ஆகியோர் தங்களது வீட்டில் மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டனர்.

இதில் அதிர்ச்சிகரமான விஷயம் என்னவென்றால், காஜல் திருமணப் பட்டுப்புடவையிலும், ராஜேந்திரா மாப்பிள்ளை கோட் சூட் அணிந்த நிலையிலும் இறந்து கிடந்துள்ளனர்.

மருத்துவப் பரிசோதனையில் காஜல் ஒன்றரை மாத கர்ப்பிணியாக இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. சம்பவ இடத்திலிருந்து தற்கொலை கடிதம் எதுவும் கிடைக்கவில்லை.

தம்பதியினர் இருவரும் மிகவும் மகிழ்ச்சியாகவும், எந்தவித பிரச்சனையும் இன்றியும் வாழ்ந்து வந்ததாக அவர்களது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

எந்தவிதமான வாக்குவாதங்களோ அல்லது மனவருத்தங்களோ இல்லாத நிலையில், அவர்கள் ஏன் இந்த விபரீத முடிவை எடுத்தார்கள் என்பது புரியாமல் உறவினர்கள் தவித்து வருகின்றனர். போலீசார் வழக்குப் பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.