சமூக வலைதளங்களில் எப்போதுமே எதாவது ஒரு வினோத வீடியோ வைரலாவது வழக்கம். அந்த வகையில், அமெரிக்க யூடியூபர் கோபி பெர்சின் பகிர்ந்துள்ள ஒரு வீடியோ தற்போது இணையத்தில் ‘பகீர்’ கிளப்பி வருகிறது.

அந்த வீடியோவின் தொடக்கத்தில் கோபி தனது காரை ஓட்டிச் செல்கிறார், ஆனால் கேமரா பின் சீட்டைத் திரும்பியதும் பார்த்தவர்கள் அனைவரும் உறைந்து போயுள்ளனர். அங்கு ஒரு மனிதருக்குப் பதிலாக, காட்டில் வாழும் கொடூரமான ‘லக்கடபக்கா’ (Hyena) எனப்படும் கழுதைப்புலி ஒன்று சீட் பெல்ட் அணிந்து மிக ஜாலியாக அமர்ந்துள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by Coby Persin (@cobypersin)

இந்த கழுதைப்புலியை தான் ஒரு காப்பகத்தில் இருந்து தத்தெடுத்ததாகக் கூறும் கோபி, அதனுடன் பேசிக்கொண்டே செல்கிறார். அப்போது அவர் பேசுவதைக் கேட்டு, அந்த கழுதைப்புலி மனிதர்களைப் போலவே சத்தமாகச் சிரிப்பது பார்ப்பவர்களை மிரள வைக்கிறது.

9 கோடிக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ள இந்த வீடியோவில், “ஒருநாள் இந்த வீடியோ வருவது நின்றால், அந்த கழுதைப்புலி தன் வேலையைக் காட்டிவிட்டது என்று அர்த்தம்” என நெட்டிசன்கள் கிண்டலாகவும் எச்சரிக்கையாகவும் கமெண்ட் செய்து வருகின்றனர். கழுதைப்புலியின் அந்த வினோத சிரிப்பு ஒருபுறம் பயத்தை ஏற்படுத்தினாலும், அதன் செய்கை பலரையும் சிரிக்க வைத்துள்ளது.