ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே நிலவி வரும் போர் பதற்றத்திற்கு மத்தியில், அமெரிக்காவின் அதிநவீன எஃப்-35 போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக ஈரான் ராணுவம் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை தனது வான் பாதுகாப்பு அமைப்பின் மூலம் இந்தத் தாக்குதலை நடத்தியதாகக் கூறப்படுகிறது.

இந்தத் தாக்குதலின்போது விமானத்திலிருந்து பாராசூட் மூலம் குதித்த அமெரிக்க விமானி தற்போது ஈரானின் பிடியில் இருப்பதாகவும், அவரை மீட்பதற்காக வந்த மீட்பு ஹெலிகாப்டரையும் ஈரான் ராணுவம் சுட்டு வீழ்த்தியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

“>

இந்தச் சம்பவம் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிடிபட்ட விமானியின் நிலை குறித்து முன்னுக்குப் பின் முரணான தகவல்கள் வெளியாகி வருகின்றன; அவர் ஈரானியப் படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ளார் என்று ஒரு தரப்பும், விமானம் வெடித்ததில் அவர் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என்று மற்றொரு தரப்பும் கூறி வருகின்றன.

மேலும் ஏற்கனவே இரு நாடுகளுக்கும் இடையே போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், அமெரிக்க விமானி ஈரானிடம் பிடிபட்டிருப்பது மத்திய கிழக்கு பிராந்தியத்தில் மிகப்பெரிய பதற்றத்தை உருவாக்கியுள்ளது. அமெரிக்கா இந்த விவகாரத்தில் எடுக்கப்போகும் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து உலக நாடுகள் உன்னிப்பாக கவனித்து வருகின்றன.