மெக்சிகோவைச் சேர்ந்த 24 வயது மருத்துவ மாணவி ரூபி ரோல்கு (Rubi Rolgue). கடந்த ஆண்டு ஏற்பட்ட திடீர் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர், சுமார் 10 நிமிடங்கள் ‘கிளினிக்கலி டெட்’ (Clinically Dead) அதாவது மருத்துவ ரீதியாக உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டார்.
அவரது மூளை செயலிழந்துவிட்டதாகவும், இனி அவர் பிழைக்க வாய்ப்பில்லை என்றும் மருத்துவர்கள் கைவிட்ட நிலையில், ஒரு அதிசயம் போல ரூபி மீண்டும் உயிர் பிழைத்தார்.
கண் விழித்த ரூபி சொன்ன விஷயங்கள் தான் தற்போது உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது. தான் மயக்க நிலையில் இருந்த அந்த 10 நிமிடங்களில், 2030-ம் ஆண்டிற்குச் சென்றுவிட்டதாக அவர் கூறுகிறார்.
“அடுத்த 5 ஆண்டுகளை நான் ஒவ்வொரு நாளாக வாழ்ந்து பார்த்தேன். அந்த உலகம் இன்றைய உலகை விட மிகவும் அமைதியாகவும், சிறப்பாகவும் இருந்தது.
அங்கு மக்கள் ஸ்மார்ட்போன்களுக்கு அடிமையாக இருக்கவில்லை. கடினமான வேலைகளை அதிநவீன தொழில்நுட்பங்கள் எளிதாக்கி இருந்தன. அதனால் மக்கள் தங்கள் குடும்பத்தினருடன் அதிக நேரத்தைச் செலவிட்டனர்” என்று ரூபி விவரித்துள்ளார்.
மேலும், அந்த அமைதியான உலகத்தைப் பார்த்துவிட்டு மீண்டும் 2025-க்குத் திரும்பியது தனக்கு நரகத்தில் விழுந்தது போல இருந்ததாக அவர் வேதனையுடன் தெரிவித்தார்.
ஒரு மரண விளிம்பு அனுபவம் (Near-Death Experience) ஒருவரை எதிர்காலத்திற்கே அழைத்துச் சென்றதாகக் கூறுவது, அறிவியலுக்கும் ஆன்மீகத்திற்கும் இடையிலான விவாதத்தை மீண்டும் தூண்டியுள்ளது.
