குஜராத் மாநிலம் ராஜ்கோட் மாவட்டத்தில், சாலையில் சென்றுகொண்டிருந்த பைக் ஓட்டுநர் மீது தெருவில் நின்றிருந்த காளை மாடு ஒன்று கொடூரமாகத் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிவ்நகர் பகுதியில் உள்ள குறுகிய சந்தில் தனது மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த நபரை, அங்கிருந்த காளை மாடு திடீரென முட்டித் தூக்கி வீசியது. சுமார் மூன்று நிமிடங்கள் நீடித்த இந்தத் தாக்குதலில், அந்த நபர் காளையின் கொம்புகளால் குத்தித் தூக்கி எறியப்பட்டார். இந்த மிரளவைக்கும் காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி (CCTV) கேமராவில் பதிவாகி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Watch | A man was attacked by stray cattle in Veraval village near Kotda Sangani in Rajkot district. The assault, which lasted less than three minutes, left him severely injured. He was rescued by nearby residents and rushed to a hospital. pic.twitter.com/m9ITdJIuLW
— DeshGujarat (@DeshGujarat) April 2, 2026
“>
படுகாயமடைந்த அந்த நபரை, அங்கிருந்த பொதுமக்கள் உடனடியாக விரைந்து வந்து மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். தெருக்களில் சுற்றித் திரியும் கால்நடைகளால் பொதுமக்களின் பாதுகாப்பிற்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் குறித்து இந்தச் சம்பவம் மீண்டும் ஒருமுறை விவாதத்தை எழுப்பியுள்ளது.
