தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் வருகிற தேர்தலில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிடும் நிலையில் முன்னதாக பெரம்பூரில் மேற்கு மனு தாக்கல் செய்தார். பின்னர் பெரம்பூர் மற்றும் கொளத்தூர் ஆகிய தொகுதிகளில் பிரச்சாரம் செய்த நிலையில் இன்று திருச்சி கிழக்கில் அவர் வேட்புமனு தாக்கல் செய்ய இருக்கிறார். இதற்காக அவர் திருச்சிக்கு வந்துள்ள நிலையில் தற்போது வேப்பமனு தாக்கல் செய்வதற்காக புறப்பட்டார். அவரை பின்தொடர்ந்து தொண்டர்களும் ரசிகர்களும் செல்வதால்

 

வழி நெடுகிலும் கூட்டமாக இருக்கிறது. இதன் காரணமாக பிரச்சார வாகனத்தில் மேலே ஏறி நடிகர் விஜய் ரோடு சோ நடத்தியபடியே செல்கிறார். இந்த நிலையில் நடிகர் விஜய்யை பின்தொடர்ந்து பைபிள் சென்ற திடீரென பெண் ஒருவர் நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதனை பார்த்து பதறிப் போன விஜய் உடனடியாக வேனில் இருந்து கீழே இறங்கி வந்து அந்த பெண்ணிடம் நலம் விசாரித்து ஆறுதல் கூறினார். மேலும் இதனை எடுத்து அவர் பிரச்சார வாகனத்தில் மீண்டும் ஏறி ரோடு ஷோ சென்றபடியே சென்றார்.