திரைத்துறையிலிருந்து விலகி முழுநேர அரசியலில் களம் கண்டுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், தற்போது சொந்த வாழ்க்கையில் சந்தித்து வரும் சவால்கள் அரசியல் மற்றும் சினிமா வட்டாரத்தில் பெரும் பேசுபொருளாகியுள்ளன. அவரது மனைவி சங்கீதா விவாகரத்து மனு தாக்கல் செய்துள்ளதாகக் கூறப்படும் தகவல், தவெக தொண்டர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 25 ஆண்டுகாலத் திருமண வாழ்க்கையில் விரிசல் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படும் நிலையில், சங்கீதா தரப்பில் விவாகரத்து கோரப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நடிகை ஒருவருடன் விஜய்க்குத் திருமணத்தைத் தாண்டிய உறவு இருப்பதாக விவாகரத்து மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாக இணையத்தில் செய்திகள் பரவின. இந்தச் சர்ச்சைகளுக்கு நடுவே, ஒரு திருமண விழாவில் நடிகை த்ரிஷாவுடன் விஜய் ஒரே நிறத்தில் ஆடையணிந்து சென்றது சமூக வலைதளங்களில் பெரும் விமர்சனத்திற்கு உள்ளானது. இருவரும் சுமூகமாகப் பிரிந்துவிடலாம் எனச் சங்கீதா தரப்பில் கேட்கப்பட்டும், அதற்கு விஜய் ஒத்துழைப்பு அளிக்காததால்தான் இந்த விவகாரம் பொதுவெளிக்கு வந்துவிட்டதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
இந்த இக்கட்டான சூழலில், விஜய் – சங்கீதா தம்பதியின் பழைய மகிழ்ச்சியான தருணங்கள் குறித்த செய்திகளை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர். குறிப்பாக ‘அழகிய தமிழ் மகன்’ படத்தின் போது விஜய் அளித்த ஒரு பேட்டி தற்போது கவனம் பெற்றுள்ளது.
அந்தப் பேட்டியில் விஜய் கூறியிருப்பதாவது, எனக்கு பாடல்கள் பாடுவது மிகவும் பிடிக்கும். எனது அம்மா, மாமா, பாட்டி என குடும்பமே நன்றாகப் பாடுவார்கள். முறையாகச் சங்கீதம் கற்காவிட்டாலும், பாடுவது எனக்குக் கிடைத்த ஒரு வரம். இதனைப் பற்றி அடிக்கடி எனது மனைவி சங்கீதாவிடம் பெருமையாகச் சொல்வேன். எனது மகன் ஜேசன் சஞ்சய் இப்போதுதான் கீ-போர்டு வாசிக்கக் கற்றுக்கொண்டு வருகிறான். அன்று தனது இசை ஆர்வம் குறித்தும், மகன் குறித்தும் மனைவி சங்கீதாவிடம் பகிர்ந்துகொண்ட விஷயங்களை விஜய் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டிருந்தார். அன்று அவ்வளவு அன்யோன்யமாக இருந்த தம்பதிக்கு இடையே இன்று ஏற்பட்டுள்ள இந்தப் பிளவு, அவரது தீவிர ரசிகர்களை மிகுந்த கவலையில் ஆழ்த்தியுள்ளது.
