பள்ளியில் மாணவர் ஒருவரால் கடுமையாகத் தாக்கப்பட்ட ஆசிரியருக்கு, பல கோடி ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. பிரிட்டனின் ‘நாசுவ்ட்’ (NASUWT) ஆசிரியர் சங்கம் வெளியிட்டுள்ள இந்தத் தகவல் கல்வித் துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது வகுப்பறையிலிருந்து மாணவர் ஒருவரை வெளியேற்ற முயன்றபோது, அந்த ஆசிரியர் மிகக் கொடூரமாகத் தாக்கப்பட்டுள்ளார். அந்த மாணவர், ரொட்டி சுடும் கருவியான ‘டோஸ்டர்’ (Toaster) மற்றும் நாற்காலியைக் கொண்டு ஆசிரியரைத் தாக்கியதுடன், அவரைக் கைக்கடிகளாலும் கால்களாலும் சரமாரியாகத் தாக்கியுள்ளார். இந்தத் தாக்குதலில் படுகாயமடைந்த ஆசிரியருக்குத் தீவிர அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து தொடரப்பட்ட வழக்கில், பாதிக்கப்பட்ட ஆசிரியருக்கு சுமார் ஒரு கோடி ரூபாய்க்கும் மேல் இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2025-ஆம் ஆண்டில் மட்டும் தனது உறுப்பினர்களுக்காக சுமார் 15.4 மில்லியன் பவுண்டுகளை (இந்திய மதிப்பில் சுமார் ரூ.165 கோடி) இழப்பீடாகப் பெற்றுத் தந்துள்ளதாக நாசுவ்ட் சங்கம் தெரிவித்துள்ளது.
மேலும் நியாயமற்ற பணிநீக்கம். ஊதியக் குறைப்பு மற்றும் பாகுபாடு. பணியிடத்தில் நேர்ந்த விபத்துகள் மற்றும் உடல்நலப் பாதிப்புகள். போன்ற பல்வேறு காரணங்களுக்காக இந்த இழப்பீடுகள் பெற்றுத் தரப்பட்டுள்ளன. ம
