கடலில் மீன் பிடிக்கச் சென்ற ஒரு மீனவருக்கு வலைக்குள் பெரிய வேட்டை ஒன்று சிக்கியிருப்பது போன்ற உணர்வு ஏற்பட்டுள்ளது. உற்சாகமாக வலையை இழுத்த அவருக்கு அடுத்த சில நொடிகளில் மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. வலையில் சிக்கியது மீன் அல்ல, ஒரு பெரிய ஆக்டோபஸ். அந்த ஆக்டோபஸ் தன்னைத் தற்காத்துக் கொள்ள மீனவரின் முகத்தின் மீது பாய்ந்து, அவரது முகத்தை அப்படியே கவ்விப் பிடித்துக்கொண்டது.

சுமார் 25 விநாடிகள் அந்த மீனவர் மூச்சு விடக்கூட முடியாமல் மரணத்தோடு போராடினார். அந்த நேரத்தில் ஆக்டோபஸ் தனது தற்காப்புக்காக மீனவரின் முகத்தில் கருப்பு நிற மையை உமிழ்ந்ததால் நிலைமை இன்னும் மோசமானது.

 

View this post on Instagram

 

A post shared by Daily Brief Global (@dailybriefglobal)

ஆக்டோபஸின் கால்கள் மீனவரின் முகத்தை மிக வலுவாக இறுக்கிப் பிடித்ததால், அதை மிகவும் சிரமப்பட்டு இழுத்து எடுக்கும்போது மீனவரின் முகத்தில் ரத்தச் சிவப்பாக ஆழமான தழும்புகள் ஏற்பட்டன.

இருப்பினும், அந்த இக்கட்டான சூழலில் பதறாமல் செயல்பட்ட மீனவர், ஒருவழியாக ஆக்டோபஸை முகத்திலிருந்து அகற்றி உயிர் தப்பினார்.

கடலோடு விளையாடுவது எவ்வளவு ஆபத்தானது என்பதை உணர்த்தும் இந்த வீடியோ இப்போது இணையத்தில் பார்ப்பவர்களை உறைந்து போக வைத்துள்ளது.