வெறும் வயிறும், குடும்பப் பொறுப்பும் ஒரு மனுஷனை எந்த எல்லைக்குக் கொண்டு போகும் என்பதற்கு இந்த வீடியோவே சாட்சி. சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வரும் இந்த வீடியோவில், சுட்டெரிக்கும் வெயிலில் ஒரு தொழிலாளி தன் முதுகில் ராட்சத அளவில் ஒரு பிரிட்ஜை (Fridge) சுமந்து செல்கிறார். மூச்சு முட்ட முட்ட, வியர்வை வெள்ளமாய் கொட்ட, பாரம் தாங்காமல் அவர் கால்கள் தள்ளாடுகின்றன.

ஆனாலும், தன் குடும்பத்தின் பசியைத் தீர்க்க அந்தப் பாரத்தை இறக்கி வைக்காமல் அவர் காட்டும் உறுதி, பார்ப்பவர் நெஞ்சைப் பிழிய வைக்கிறது. இந்த வீடியோ எங்கே எடுக்கப்பட்டது என்ற விவரம் தெரியவில்லை என்றாலும், “Ghar Ke Kalesh” என்ற எக்ஸ் (X) பக்கத்தில் பகிரப்பட்ட நொடியிலிருந்து பல லட்சம் பார்வைகளைக் கடந்து இணையத்தையே கலங்கடித்து வருகிறது.

​இந்தக் காட்சியைப் பார்த்த நெட்டிசன்கள் கண்ணீர் மல்கத் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர். “குடும்பப் பொறுப்பு ஒரு ஆம்பளையை இரும்பா மாத்திடும்”, “பசியும் வறுமையும் மனுஷனை அழக்கூட விடாது” எனப் பலரும் உருக்கமாகப் பதிவிட்டு வருகின்றனர். மார்ச் 31, 2026 அன்று பதிவேற்றப்பட்ட இந்த வீடியோ, இதுவரை 3 லட்சத்திற்கும் அதிகமான வியூஸ்களைப் பெற்றுள்ளது.

கஷ்டப்பட்டு உழைக்கும் ஒவ்வொரு ஆணின் வலியையும், வறுமையின் கோரத்தையும் ஒரு நிமிடம் கண்முன்னே நிறுத்தும் இந்த வைரல் வீடியோ, தற்போது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.