பள்ளிச் சீருடை அணிந்த மாணவர் ஒருவர் உருவாக்கியுள்ள ஆக்கபூர்வமான ‘துணி மடிக்கும் இயந்திரம்’ சமூக வலைதளங்களில் பலரது பாராட்டுக்களைப் பெற்று வைரலாகி வருகிறது. மரப்பலகைகள், கீல்கள் மற்றும் நெம்புகோல் அமைப்பைக் கொண்டு மிக எளிமையாக இந்த இயந்திரத்தை அவர் வடிவமைத்துள்ளார்.

இடது, வலது மற்றும் கீழ் என மூன்று பக்க பலகைகளைக் குறிப்பிட்ட வரிசையில் இயக்குவதன் மூலம், கலைந்து கிடக்கும் சட்டைகளை மிகச்சரியாகவும் அழகாகவும் மடிக்க முடிகிறது.

கையால் துணி மடிப்பதற்கு ஆகும் நேரத்தை விட, இந்த இயந்திரம் சில நொடிகளிலேயே வேலையை முடித்துவிடுகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Sarcastic_Doctorrr (@sarcastic_doctorrr)

“>

பெரிய நிறுவனங்களோ அல்லது விலையுயர்ந்த ஆய்வகங்களோதான் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்க வேண்டும் என்பதில்லை; அன்றாடப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டும் என்ற ஆர்வமும், தெளிவான திட்டமிடலும் இருந்தால் வகுப்பறையிலிருந்தே இது போன்ற பயனுள்ள கண்டுபிடிப்புகள் பிறக்கும் என்பதற்கு இந்த மாணவரே சிறந்த உதாரணம் என்று இணையவாசிகள் பாராட்டி வருகின்றனர்.