ஐபிஎல் 2026 சீசனின் பரபரப்பான மும்பை – கொல்கத்தா மோதலுக்குப் பிறகு, மைதானத்தில் ஒரு சுவாரஸ்யமான சம்பவம் நடந்துள்ளது. வழக்கமாக மூத்த வீரர்களிடம் பேட் கேட்டு அடம் பிடிக்கும் கொல்கத்தா அணியின் நம்பிக்கை நட்சத்திரம் ரிங்கு சிங், இந்த முறை மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியாவைக் குறிவைத்துள்ளார்.
போட்டி முடிந்ததும் வீரர்களுக்கு இடையே கைகுலுக்கல் நடந்தபோது, ஹர்திக் பாண்டியாவின் கையில் இருந்த பேட்டை ரிங்கு சிங் விளையாட்டுத்தனமாகப் பறித்துக்கொண்டு ஓட முயன்றார்.
Rinku Singh is a proper bat lover 😭
Last time, he took the bat from Rohit Sharma. And this time, the moment the match ended, he shook hands with Hardik Pandya and casually walked away with the bat 🤣 pic.twitter.com/HOVIEavLxt
— Rohan💫 (@rohann__45) March 30, 2026
இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த ஹர்திக் பாண்டியா, தனது பேட்டைத் திரும்பப் பெற முயல, ரிங்கு சிங் அவரிடம் கெஞ்சுவது போலவும், ஜாலியாக வம்பிழுப்பது போலவும் செய்த குறும்புகள் அங்கிருந்தவர்களைச் சிரிக்க வைத்தது.
ஏற்கனவே விராட் கோலியிடம் பேட் வாங்கி அதை உடைத்த ‘வரலாறு’ ரிங்கு சிங்கிற்கு இருப்பதால், ஹர்திக் பாண்டியா தனது பேட்டைப் பத்திரப்படுத்தப் போராடினார்.
இந்திய அணியின் சக வீரர்களான இவர்களுக்குள் இருக்கும் இந்த நட்பு மற்றும் கலகலப்பான கலாட்டா வீடியோ இப்போது இணையத்தில் செம வைரலாகி வருகிறது. “பேட் திருடன் ரிங்கு சிங்” என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அவரை செல்லமாகக் கலாய்த்து வருகின்றனர்.
