தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான தனது முதல் பரப்புரையை இன்று (மார்ச் 30) சென்னை பெரம்பூரில் தொடங்கினார். பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் திரண்டதால் அந்தப் பகுதியே ஸ்தம்பித்தது. இந்நிலையில், விஜய்யின் பாதுகாப்பு குறித்துத் தவெக இணைப் பொதுச்செயலாளர் நிர்மல்குமார் தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்கிற்கு அவசரப் புகார் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

​அந்தக் கடிதத்தில், விஜய்யின் பரப்புரைக்குத் தேவையான போதிய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படவில்லை என்றும், இது தொண்டர்கள் மற்றும் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். பெரம்பூரில் பரப்புரை தொடங்கிய முதல் நாளிலேயே பாதுகாப்பு குறைபாடு குறித்துப் புகார் எழுந்துள்ள சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.