இன்று காலை தங்கம் விலை சவரனுக்கு ₹480 வரை குறைந்தது நடுத்தர மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. ஆனால், மாலை நேர நிலவரம் நகைப்பிரியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மாலை வேளையில் தங்கம் விலை தடாலடியாகச் சவரனுக்கு ₹1,360 வரை அதிகரித்துள்ளது.

​தற்போது சென்னையில் 22 கேரட் தங்கம் 1 கிராம் ₹13,770-க்கும், ஒரு சவரன் ₹1,10,160-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாகச் சரிந்து வந்த தங்கம் விலை, கடந்த 3 நாட்களாக மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. விலை மாற்றம் இவ்வளவு வேகமாகவும், கணிக்க முடியாத வகையிலும் இருப்பது நகை ஆர்வலர்களை பெரும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.