திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தமிழகத்தில் அனைத்து வரிகளும் வரலாறு காணாத வகையில் உயர்த்தப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்துள்ளார். சொத்து வரி 100 சதவீதமும், கடைகளுக்கான வரி 150 சதவீதமும் உயர்த்தப்பட்டுள்ளதோடு, மின் கட்டணம் 52 சதவீதம் வரை ஏறி சாமானிய மக்களை வாட்டி வதைப்பதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

“குப்பையைக்கூட விட்டு வைக்காமல் அதற்கும் வரி போட்டுள்ள இந்த திமுக அரசு, மக்களின் பணத்தை வரியாகப் பிடுங்குகிறது” என அவர் காரசாரமாகப் பேசியுள்ளார். ​மேலும், வரி உயர்வு மூலம் அரசுக்கு வருமானம் பல மடங்கு அதிகரித்த பிறகும், கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் சுமார் 5 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கியுள்ளதாக EPS சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வளவு பெரிய தொகையைக் கடனாக வாங்கியும் மக்கள் நலத்திட்டங்கள் முறையாகச் சென்றடையவில்லை எனத் தெரிவித்த அவர், தமிழகத்தின் நிதி மேலாண்மை கேள்விக்குறியாக உள்ளதாகச் சாடியுள்ளார். எடப்பாடியாரின் இந்த அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.