கன்னியாகுமரி தொகுதியில் அதிமுக வேட்பாளர் தளவாய் சுந்தரத்தை ஆதரித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது மேடையில் இருந்த அதிமுக நிர்வாகிகள், எடப்பாடி பழனிசாமியும் நடிகர் அஜித்தும் ஒன்றாக அமர்ந்திருப்பது போன்ற ஒரு புகைப்படத்தைப் பரிசாக வழங்கினர்.
அந்தப் புகைப்படத்தில் அஜித்தின் புகழ்பெற்ற ‘Never Ever Give Up’ என்ற வசனமும் இடம்பெற்றிருந்தது. இதைப் பார்த்து நெகிழ்ந்து போன எடப்பாடி பழனிசாமி, மிகுந்த மகிழ்ச்சியுடன் அந்தப் புகைப்படத்தைப் பெற்றுக்கொண்டதோடு மட்டுமல்லாமல், அங்கு திரண்டிருந்த ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மத்தியில் அதைப் உயர்த்தி காண்பித்தார்.
தேர்தல் பிரச்சாரத்தின் போது நடிகர் அஜித்தின் புகைப்படத்தை இபிஎஸ் உயர்த்திக் காட்டியது, அந்தப் பகுதி அஜித் ரசிகர்கள் மற்றும் அதிமுக தொண்டர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் புகைப்படங்கள் தற்போது #TNElection2026 என்ற ஹேஷ்டேக்குடன் இணையத்தில் வைரலாகி வருகிறது.
