தமிழகத்தையே உலுக்கிய சாத்தான்குளம் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் தந்தை – மகன் கொலை வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட 9 போலீசாரும் குற்றவாளிகள் என மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் செசன்ஸ் நீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பளித்திருந்தது. இந்த வழக்கில் இன்று (மார்ச் 30) குற்றவாளிகளுக்கான தண்டனை விவரங்கள் வழங்கப்பட உள்ளன.

இந்தத் தீர்ப்புக்காக ஒட்டுமொத்த தமிழகமும் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறது. கடந்த 2020-ம் ஆண்டு, காவல் நிலையத்தில் நடந்த கொடூரமான தாக்குதலில் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் உயிரிழந்த சம்பவம், காவல்துறையின் மீதான நம்பிக்கையையே கேள்விக்குள்ளாக்கியது.

இந்த வழக்கில் தற்போது நீதி கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு பென்னிக்ஸின் குடும்பத்தினரிடமும், ஒட்டுமொத்த தமிழக மக்களிடமும் எழுந்துள்ளது. சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை உறுதி செய்யும் வகையில் இன்று என்ன தண்டனை வழங்கப்படப் போகிறது என்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.