பெங்களூருவின் அஷ்வத் நகர் பகுதியில், விறகு அடுப்பைப் பயன்படுத்திச் சமைத்ததற்காக ஒரு குடும்பம் வாடகை வீட்டிலிருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வளைகுடாப் போர் காரணமாக நிலவும் எரிவாயு தட்டுப்பாட்டால், கடந்த சில நாட்களாக அந்தக் குடும்பத்திற்குச் சமையல் எரிவாயு (LPG) கிடைக்கவில்லை.

சிலிண்டர் முன்பதிவு செய்தும் வராத நிலையில், வேறு வழியின்றி அந்தப் பெண் வீட்டின் வெளியே விறகு அடுப்பை மூட்டிச் சமைக்கத் தொடங்கியுள்ளார்​இதைப் பார்த்த வீட்டு உரிமையாளர், “விறகு அடுப்பு புகையால் வீட்டின் பெயிண்ட் பாழாகிவிடும், சுவர்கள் கருப்பாகிவிடும்” என்று கூறி ஆத்திரமடைந்துள்ளார்.

வாடகைதாரர்களின் அடிப்படைத் தேவையை விடத் தனது வீட்டின் பெயிண்டிற்கு முக்கியத்துவம் கொடுத்த அவர், உடனடியாக அவர்களை வீட்டை விட்டு வெளியேறுமாறு உத்தரவிட்டுள்ளார். “சாப்பிடாமல் இருக்க முடியுமா? பெயிண்ட் போய்விடும் என்பதற்காக எங்களை நடுத்தெருவில் நிறுத்திவிட்டார்” என்று அந்தப் பெண் கண்ணீர் மல்கக் கூறியுள்ளது சமூக வலைதளங்களில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.