பெங்களூருவில் ஐபிஎல் திருவிழா களைகட்டியுள்ள நிலையில், ஆர்சிபி (RCB) அணியின் தீவிர ரசிகரான ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் சமூக வலைதளங்களில் பலரது கவனத்தை ஈர்த்துள்ளார். 18 ஆண்டுகளுக்குப் பிறகு 2025-ல் தனது முதல் கோப்பையை வென்ற ஆர்சிபி அணி மீது ரசிகர்கள் வைத்துள்ள அன்பு அளப்பரியது.
தற்போது 19-வது சீசன் தொடங்கியுள்ள நிலையில், ஆர்சிபி அணியின் ஜெர்சி அணிந்து தனது ஆட்டோவில் பயணம் செய்யும் ரசிகர்களுக்கு இலவச சவாரி வழங்குவதாக அந்த ஓட்டுநர் அறிவித்துள்ளார். “ஈ சாலா கப் நம்தே 2.0” மற்றும் “ஆர்சிபி ஃபாரெவர்” போன்ற வாசகங்கள் அடங்கிய அவரது ஆட்டோவின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இது குறித்து மஹிகா ஜாதவ் என்ற பயனர் பகிர்ந்த பதிவில், இந்தியாவில் கிரிக்கெட் என்பது வெறும் விளையாட்டு மட்டுமல்ல, அது ஒரு உணர்வு என்று குறிப்பிட்டுள்ளார். ஆர்சிபி ரசிகர்கள் காட்டும் இந்த விசுவாசத்தை பலரும் பாராட்டி வரும் நிலையில், ஒரு சிலர் அந்த ஓட்டுநரின் உழைப்பையும் கருத்தில் கொண்டு கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
2026 ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் ஆர்சிபி மற்றும் ஹைதராபாத் அணிகள் மோதவுள்ள நிலையில், இந்த முறையும் பெங்களூரு அணி கோப்பையைத் தக்கவைக்குமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.
