ஐ.பி.எல். தொடரின் நடப்பு சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் உரிமம் மாற்றம் குறித்த முக்கியத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த அணியை நிர்வகித்து வந்த மதுபான நிறுவனமான டியாஜியா, கடந்த நவம்பர் மாதம் விற்பனை நடவடிக்கைகளைத் தொடங்கியது.

தற்போது, ஆதித்யா பிர்லா குழுமம் ஆகிய நிறுவனங்கள் இணைந்து சுமார் 16,705 கோடி ரூபாய்க்கு இந்த அணியை வாங்கியுள்ளன.

இவ்வளவு பெரிய தொகைக்கு அணி கைமாறியது கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அணி புதிய உரிமையாளர்களின் கைக்குச் சென்றதால், அதன் பெயர் மாற்றப்படலாம் என்ற தகவல் பரவி ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தங்களுக்குப் பிடித்தமான ‘ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு’ என்ற பெயர் மாறிவிடுமோ என்று ரசிகர்கள் கவலை அடைந்தனர்.

ஆனால், ரசிகர்களின் கவலையைப் போக்கும் வகையில், அணியின் பெயர் மாற்றப்படாது என்று ஆதித்யா பிர்லா நிறுவனம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது. இதனால் ஆர்.சி.பி ரசிகர்கள் மிகுந்த உற்சாகமும் நிம்மதியும் அடைந்துள்ளனர்.