ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் புதிய முகமாக உருவெடுத்துள்ள அனன்யா பிர்லா, சமூக வலைதளங்களில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளார். ஆதித்யா பிர்லா குழுமம் சுமார் 16,700 கோடி ரூபாய்க்கு ஆர்சிபி அணியை வாங்கியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், அந்த அணியின் நிர்வாகத்தில் அனன்யா பிர்லா முக்கியப் பங்கு வகிக்கிறார்.

மேலும் சமீபத்தில் ஆர்சிபி அணியின் வெற்றியைக் கொண்டாடும் விதமாக, அனன்யா பிர்லா கிதார் வாசித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்திய வீடியோ இணையத்தில் வைரலானது. இது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியதோடு, சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் உரிமையாளர் காவ்யா மாறனுடன் அவரை ஒப்பிட்டுப் பேசவும் வழிவகுத்துள்ளது.

“>

இதனால் சமூக வலைதளங்களில் காவ்யா மாறன் மற்றும் அனன்யா பிர்லா ஆகிய இருவருக்கும் இடையே ஒரு மெய்நிகர் ஒப்பீடு தொடங்கியுள்ளது. இதுவரை ஐபிஎல் மைதானங்களில் காவ்யா மாறனின் உணர்ச்சிகரமான வெளிப்பாடுகள் ரசிகர்களைக் கவர்ந்து வந்த நிலையில், தற்போது அனன்யா பிர்லாவின் வருகை ஆர்சிபி ரசிகர்களுக்கு ஒரு புதிய உத்வேகத்தைத் தந்துள்ளதாக நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் “ஐதராபாத்திற்கு காவ்யா என்றால், பெங்களூருவுக்கு அனன்யா” என்ற ரீதியில் மீம்ஸ்களும் கருத்துகளும் பகிரப்பட்டு வருகின்றன. குறிப்பாக, அனன்யா பிர்லாவின் இசைத்திறன் மற்றும் ஸ்டைலான தோற்றம் ஆகியவை காவ்யா மாறனுக்குப் போட்டியாக அமையும் என கிரிக்கெட் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் விவாதித்து வருகின்றனர்.