மகாராஷ்டிர மாநிலம் டோம்பிவிலியில் உள்ள லோதா ஹெவன் என்ற அடுக்குமாடி குடியிருப்பில், சாக்கடை கால்வாய் சுத்தம் செய்வது தொடர்பாக இரு குடும்பங்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. யோகி என்பவரது குடும்பத்தினர் தங்கள் வீட்டின் பின்புறம் உள்ள கால்வாயைச் சுத்தம் செய்தபோது, அண்டை வீட்டில் வசிக்கும் திவாரி குடும்பத்தினர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இந்த வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறிய நிலையில், இரு தரப்பினரும் கற்கள் மற்றும் துடைப்பங்களால் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். இந்த மோதலின் உச்சகட்டமாக, திவாரி குடும்பத்தினர் தங்கள் வீட்டில் வளர்க்கும் செல்லப்பிராணி நாயை அண்டை வீட்டார் மீது ஏவி விட்டுள்ளனர்.
அந்த நாய் கடித்ததில் மனோஜ் யோகி மற்றும் அவரது மகன் ஆகிய இருவரும் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த அதிர்ச்சிகரமான காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளன.
डोंबिवलीतील घटना, शेजाऱ्याने दुसऱ्या शेजाऱ्याच्या अंगावर सोडला पाळीव कुत्रा, कुत्र्याने चावा घेतल्याने दोन जण जखमी.. pic.twitter.com/IxJio6EbIL
— VIRALबाबा (@viralmedia70) March 24, 2026
“>
இது குறித்து யோகி குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில், சந்தோஷ் திவாரி உட்பட அவரது குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் மீது மான்பாடா காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
