ஈரான் அண்மையில் வெளியிட்டுள்ள ஏஐ தொழில்நுட்பத்திலான வீடியோக்கள், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலை கேலி செய்யும் வகையில் அமைந்துள்ளன. இந்த வீடியோக்களில் ஒன்றில், அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் ‘டெலிடப்பி’ போன்ற வேடிக்கையான உருவத்தில் சித்தரிக்கப்பட்டு, மற்றவர்களிடம் உதவி கேட்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

மேலும் அதிநவீன செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, ஒரு நாட்டின் தலைவரை இவ்வளவு கிண்டலாகச் சித்தரித்திருப்பது சர்வதேச அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மற்றொரு வீடியோவில், ஈரானின் உயர்மட்டத் தலைவரான அயதுல்லா அலி காமேனி இடிபாடுகளுக்கு நடுவே இருந்து கம்பீரமாக எழுந்து வருவது போன்ற காட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே போர் பதற்றம் நீடித்து வரும் நிலையில், அமெரிக்காவையும் அதன் நட்பு நாடான இஸ்ரேலையும் உளவியல் ரீதியாகத் தாக்குவதற்காக ஈரான் இந்த டிஜிட்டல் உத்திகளைக் கையாண்டு வருவதாகப் பார்க்கப்படுகிறது. இத்தகைய வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதுடன், உலக நாடுகளிடையே விவாதத்தையும் கிளப்பியுள்ளன.